அரிசி உப்மா - உப்மா பிரியர்களின் முக்கிய விருப்பம் இது
தேவையான பொருள்கள்: பச்சரிசி நொய் முக்கால் ஆழாக்கு கடுகு கால் ஸ்பூன் உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன் காய்ந்த மிளகாய் 3 துவரம் பருப்பு அரை ஸ்பூன் பெருங்காயம் 1 சிட்டிகை தேங்காய்த் துருவல் 2 ஸ்பூன் உப்பு தேவையான அளவு செய்முறை: ஒரு வாணலியில் அரைக் கரண்டி எண்ணெய் விட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பெருங்காயம் இவை எல்லாவற்றையும் போட்டு வறுத்துக் கொண்டு ஒன்றரை ஆழாக்கு தண்ணீரைக் கொட்டி உப்பு போட்டு, துருவிய தேங்காயையும் உடன் போடவும். இப்போது தண்ணீர் நன்றாக கொதிக்கும் சமயத்தில் நொய்யைக் கொஞ்சம், கொஞ்சமாக கொட்டிக் கிளறி கருவேப்பில்லை சேர்க்கவும். பக்கங்களில் ஒட்டாமல் அடிப் பிடிக்காமல் கிண்டவும். பின்குறிப்பு : சிலர் அரிசி உப்புமாவை வெண்கலப் பானையில் சமைப்பார்கள். எல்லாவற்றையும் போட்டு நன்கு கொதிக்கும் சமயத்தில், ஒரு குழிவான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதனால் வெண்கலப் பானையை மூடி வைத்தால் அடி பிடித்துக் கொள்ளாமல் இருக்கும். ஆனால் பானையின் பக்கங்களில் ஒட்டாதவாறு நாம் தான் நன்றாகக் கிண்ட வேண்டும். -

Comments
Post a Comment