முந்திரிப் பருப்பு கேக்


கேக் புரதத்தை அதிகரிக்கும் முந்திரிப் பருப்பு கேக்
தேவையான பொருள்கள்: முந்திரிப் பருப்பு 30 தேங்காய் ஒன்றரை மூடி சர்க்கரை இரண்டரை ஆழாக்கு செய்முறை: முந்திரிப் பருப்பை ஒரு மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். இப்போது ஊற வைத்த முந்திரிப் பருப்பை தேங்காய் உடன் வைத்து நன்கு கெட்டியாக வெண்ணெய் போல அரைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் போல அரைத்த விழுதை சர்க்கரையுடன் சேர்த்து விடாமல் கிளறவும். (அடிப் பிடிக்கக் கூடாது. எல்லாமே ஒன்றாக சம அளவில் சேரும் படி கிண்ட வேண்டும். கிண்டுவதில் தான் விஷயம் உள்ளது) இரண்டு ஸ்பூன் நெய்யை விட்டு மீண்டும் நன்கு கிளறவும். இப்படியாக சுமார் இருபது நிமிடங்கள் பாத்திரத்தில் ஒட்டாமல் மேற்கண்டவற்றை கிண்டி நன்கு பூத்து வரும் சமயத்தில் நெய் தடவிய அகன்ற பாத்திரத்தில் கொட்டி வில்லைகளாகப் போடவும். இதோ இப்போது சுவையான முந்திரிப் பருப்பு கேக் தயார். முந்திரிப் பருப்பு அதிக நல்ல கொலஸ்ட்ராலை தரும். அதனால் உடல் எடை அதிகம் வேண்டுபவர்கள் இதனை செய்து சாப்பிடலாம்.

Comments