மைதா மாவு கேக்


குழந்தைகள் விரும்பி உண்ணும் மைதா மாவு கேக்
தேவையான பொருள்கள்: மைதா மாவு ஒரு ஆழாக்கு சர்க்கரை ஒன்றரை ஆழாக்கு நெய் நான்கு கரண்டி செய்முறை: ஒரு கனமான வாணலியில் நெய்யை விட்டு அது நன்கு காய்ந்தவுடன் மைதா மாவைக் கொட்டி கட்டி இல்லாமல் கிளறி 2 -3 நிமிடங்களில் தயிர் போன்ற பதம் வந்த மாத்திரத்தில் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். மறுபுறம் சர்க்கரையை இரண்டு கரண்டி தண்ணீர் விட்டுப் பாகு வைத்துக் கொள்ளவும். (அதாவது ஒரு தட்டில் ஒரு சொட்டு விட்டுக் கையால் உருட்டினால் முத்து போல வர வேண்டும். அந்தப் பதம் வரும் வரையில் கிண்டிக் கிளறவும்) மேற்சொன்ன பதத்தில் பாகு வந்தவுடன் பாத்திரத்தை இறக்கி வைத்துக் கொள்ளவும். இனிமேல் அடுப்பில் வைத்துக் கிளறத் தேவை இல்லை. பின்னர் பாகில் கொஞ்சம் கொஞ்சமாக, ஏற்கனவே கிளறி வைத்த மாவை விட்டு மேலும், மேலும் நன்கு எல்லாம் சரி சமமாக சேரும் படியாகக் கிளற வேண்டும். (பாத்திரத்தில் ஓட்டக் கூடாது. கவனம்) மேற்கண்ட படி பாத்திரத்தில் ஒட்டாமல் சிறிது நேரம் கிண்டிய பிறகு (தேவைப் பட்டால் முந்திரிகளை கூட சிறு துண்டுகளாக்கிப் போடலாம்) ஒரு தட்டில் கொட்டி சமமாக்கி வில்லைகளாகப் போடலாம். இதோ இப்போது சுவையான மைதா மாவு கேக் தயார். -

Comments