மைதா தோசை - அவசரத்திற்கு ஒரு எளிய டிபன் தேவையான பொருள்கள்: மைதா மாவு 1 ஆழாக்கு அரிசி மாவு 1 பிடி சீரகம் அரை ஸ்பூன் உப்பு தேவையான அளவு மோர் 1 கரண்டி பச்சை மிளகாய் 1 காரம் அதிகம் தேவைப் பட்டால் ஒன்று, இரண்டு கூட சேர்த்துக் கொள்ளலாம் செய்முறை: ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் மோருடன், உப்பு, சீரகம், பொடிப் பொடியாய் நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பில்லை ஆகியவற்றை போட்டு சலித்த மாவுகளையும் போட்டு இரண்டு கரண்டி தண்ணீர் விட்டு தேவையானால் சுவையை கூட்ட விரும்பினால் வெங்காயத்தையும் பொடிப் பொடியாக நறுக்கிப் போட்டுக் கரைத்துக் கொள்ளவும். இப்போது தோசையை வார்க்கத் துவங்கவேண்டும். மைதா மாவு தோசை வார்க்கும் சமயத்தில், நடுவில் மாவு ஊற்றிக் கரண்டியால் பெரிதாக்காமல் தோசைக்கு கல்லின் ஓரங்களில் முதலில் மாவு ஊற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக உள் பக்கம் வட்டமாக ஊற்றி ஓரங்களில் எண்ணெய்யை விட்டு வார்க்கவும். கண்டிப்பாக கரண்டியால் சரிப்படுத்தக் கூடாது. இல்லையேல் தோசை கெட்டு விடும். கவனம். மைதா மாவு உடலுக்கு கேடு தரும். ஒரு அவசரத்துக்கு வேண்டும் என்றால் இதனை தோசையாக சுட்டு அப்போதைக்கு சமைத்து ஒன்று, இரண்டு சாப்பிட்டுக் கொள்ளலாம்.

Comments
Post a Comment