இடியாப்பம் - இது தமிழகத்தின் நூடில்ஸ் கேக்
தேவையான பொருள்கள்: அரிசி மாவு 2 கப் தண்ணீர் 2 கப் நல்லெண்ணெய் 1 மேஜைக் கரண்டி உப்பு தேவையான அளவு செய்முறை: அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு சிறிது உப்பை சேர்க்கவும். அத்துடன் நன்கு கலக்கவும். மறுபுறம் தண்ணீரை கொதிக்க வைத்து அந்த நீரை மாவுக் கலவையுடன் சேர்த்து நன்கு பிசையவும். பின்பு அதனை மூடி சில நிமிடங்கள் அப்படியே வைத்து சிறிது நேரம் கழித்து மூடியைத் திறந்து எண்ணெய்யை சேர்க்கவும் மீண்டும் பிசையவும். பிறகு அந்த மாவை இடியப்பத்தின் அச்சில் வைத்து இட்லி தட்டுகளை எடுத்து அதில் எண்ணெய் தடவி மாவை பிழிந்து எடுக்கவும். பின்பு அவற்றை இட்லி குக்கரில் வைத்து மூடி வைத்து குறைந்த flame இல் வேக வைக்கவும். 15 நிமிட நேரத்தில் இடியாப்பம் வெந்து விடும். நன்றாக வெந்து விட்டதா என்பதை அறிய தண்ணீரில் குச்சியை நனைத்து பொறுமையாக அதில் மாவு ஒட்டுகிறதா என்று கூட பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம். மாவு குச்சியில் ஓட்டினால் வேகவில்லை என்று அர்த்தம். ஒரு வேளை மாவு குச்சியில் ஒட்டவில்லை என்றால் நன்றாக வெந்து விட்டது என்று அர்த்தம். உடனே இடியாப்பத்தை இறக்கி பத்திரமாக ஸ்பூன் கொண்டு இடியாப்பம் சிதையாமல் இட்லித் தட்டில் இருந்து எடுத்து சாப்பாட்டுத் தட்டில் வைத்துப் பரிமாறவும். இதோ சுவையான இடியாப்பம் தயார். -

Comments
Post a Comment