ஸ்ரீ கிருஷ்ணருக்குப் பிடித்த அவல் பாயசம்
தேவையான பொருள்கள்: பால் 2 லிட்டர் அவல் 1 ஆழாக்கு சர்க்கரை ஒன்றரை ஆழாக்கு நெய் நான்கு ஸ்பூன் முந்திரி 20 ஏலக்காய் 4 திராட்சை தேவையான அளவு செய்முறை: முந்திரியை உடைத்து வைத்துக் கொண்டு, ஏலக்காயையும் தட்டி வைத்துக் கொள்ளுங்கள். உடன் அவலை தூசு நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் பாலை எப்போதும் போல நன்கு காய்ச்சிக் கொள்ளுங்கள். இப்போது அவலைக் காய்ச்சிய பாலில் சேர்த்து அடுப்பை மீடியமாக சிம்மில் வைத்துக் கொண்டு நன்கு வேகவிடவும். அவல் வெந்த மாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து நன்கு கரையும் வரையில் கிண்டி கொதிக்கவிட்டு இறக்கவும். பிறகு நெய்யை காய வைத்து ஏற்கனவே உடைத்து வைத்திருக்கும் முந்திரியையும், திராட்சையையும் நெய்யில் வறுத்து உடன் பொடி செய்த ஏலக்காயையும் சேர்த்து பாயசத்தில் போட்டு எல்லாம் நன்கு சேரும் படியாகக் கிளறவும். பின்பு அனைவருக்கும் கப்பில் பரிமாறவும். இதோ இப்போது சுவையான அவல் பாயசம் தயார். -

Comments
Post a Comment