போளி - இது நம் மக்களின் ஜனாதிபதி கலாமின் பேவரைட்
தேவையான பொருள்கள்: கடலைப் பருப்பு 2 ஆழாக்கு தூள் செய்யப்பட்ட வெல்லம் 2 ஆழாக்கு மைதா மாவு 2 ஆழாக்கு மஞ்சள் பொடி கால் ஸ்பூன் முந்திரிப் பருப்பு 12 தேங்காய் 1 மூடி நெய் 1 கரண்டி தண்ணீர் தேவையான அளவு செய்முறை: மைதா மாவை சிறிது தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவை போன்றே கெட்டியாகப் பிசைந்து தேவையான அளவு எண்ணெய், கால் ஸ்பூன் மஞ்சள் பொடி போட்டு மேலும் நன்கு பிசைந்து வைக்கவும். கடலைப் பருப்பை கழுவிக் கல் இல்லாமல் களைந்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் கடலைப் பருப்பின் தண்ணீரை வடிகட்டி விட்டு, வெந்த அந்த கடலைப் பருப்புடன், வெல்லத் தூள், துருவிய தேங்காய், ஏலக்காய் ஆகிய இவற்றையும் போட்டு மறுபடியும் அடுப்பில் வைத்து ஐந்து நிமிடங்கள் கிளறி இறக்கி வைக்கவும். இப்போது கடலைப் பருப்புடன் சேர்ந்த மேற்கண்ட கலவையை விழுது போல தண்ணீர் விடாமல் கெட்டியாக மிக்சியில் அரைக்கவும். அந்த விழுதில் நன்கு உடைத்த முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். அத்துடன் நீங்கள் முன்பு பிசைந்த மைதாவை ஒரு மிகச் சிறிய அளவு உருண்டையாக உருட்டி ஒரு எண்ணெய் தடவிய இலையின் (அல்லது சுத்தமான பாலிதீன் கவரின்) மீது வைத்து ஓர் அப்பளம் அளவுக்கு மெல்லியதாகத் தட்டவும். இப்போது ஒரு சிறிய எலுமிச்சை அளவு அரைத்த விழுதை உருட்டி, இந்த அப்பளத்தின் மீது நடுவில் வைத்து, இன்னொரு மைதா அப்பளத்தால் மூடி பிரியாமல் எண்ணெய்த் தொட்டு ஓரங்களை ஒட்டவும். மறுபடியும் சமமாக கால் அங்குல கனத்துக்குப் போளியாக தட்டவும். தட்டிய அந்த பச்சைப் போளியை தயாராக வைத்து இருக்கும் சூடான தோசைக் கல்லில் போட்டுச் சிறிது நெய் விட்டுத் திருப்பிப் போட்டு எடுக்கவும். இதோ இப்போது சுட்ட போளிகளை சுடச் சுட தட்டில் வைத்துப் பரிமாறவும். சுவை மிகுந்த போளிகள் தயார். -

Comments
Post a Comment