அரிசி வடை


அதிக கலோரிகளை தரும் அரிசி வடை - இது விளையாட்டு வீரர்களுக்கானது தேவையான பொருள்கள்: புழுங்கல் அரிசி ஒரு ஆழாக்கு துருவிய தேங்காய் ஒரு கப் அல்லது பத்து ஸ்பூன் உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன் காய்ந்த மிளகாய் 5 பெருங்காயம் ஒரு சிட்டிகை அளவு புளித்த கெட்டித் தயிர் அரை ஆழாக்கு கருவேப்பில்லை, கொத்தமல்லி சிறிதளவு உப்பு தேவையான அளவு செய்முறை: அரிசியை நன்றாக கல் போக தண்ணீரில் களைந்து விடுங்கள். இப்போது அரிசி களைந்த தண்ணீரை வடிகட்டி விட்டு அந்த அரிசியுடன் உளுத்தம் பருப்பையும் போட்டு தயிரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் நன்கு ஊறிய அரிசி, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு, பெருங்காயம் இவை அனைத்தையும் கெட்டியாகத் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். இப்போது அரைத்த அந்த மாவுடன் கருவேப்பில்லை, கொத்தமல்லியை நன்கு கழுவி சேர்த்துக் கலக்கவும். இப்போது சுத்தமான துணி அல்லது இலையை எடுத்துக் கொண்டு மாவை பக்குவமாக எடுத்துத் தட்டி எண்ணெய்யில் பத்திரமாக போட்டுப் பொன்னிறமாக ஆகும் வரையில் பொரிக்கவும். பிறகு பொன்னிறத்தில் ஆன வடையை எடுத்து தட்டில் வைத்து சுடச் சுட பரிமாறவும். இதோ சுவையான அரிசி வடை தயார். -

Comments