சப்பாத்தி


நார் சத்து மிக்க சப்பாத்தி - இது அரிசி உணவுக்கு மாற்று வழி
தேவையான பொருள்கள்: கோதுமை மாவு ஒன்றரை ஆழாக்கு (அதாவது ஒன்றரை சின்ன கப் அல்லது 126ml + 63 ml = 189 ml) உப்பு தேவையான அளவு நெய் ஒன்றரை ஸ்பூன் செய்முறை: கோதுமை மாவைச் சலித்து, ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, இரண்டு ஸ்பூன் நெய் இவற்றைச் சேர்த்து கொஞ்சம், கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நன்றாகக் பிசையவும். பிறகு சிறிது தளர்த்திப் பிசைந்து, சப்பாத்திப் பலகையில் போட்டு நன்றாக உருட்டிப் பிசைந்து சிறு உருண்டை அளவுக்குச் செய்து அப்பளம் அளவிற்கு உருட்டிக் கொள்ளவும். (தண்ணீர் உங்களை அறியாமல் அதிகம் ஊற்றி விட்டால் சிறிதளவு கோதுமை மாவை வைத்துக் கொண்டு உருட்டும் போதே சிறிது தொட்டுக் கொள்ளலாம்) இப்போது அப்பளம் அளவிற்கு உருட்டப்பட்ட அந்த கோதுமையில் கால் ஸ்பூன் அளவு நெய் தடவி மடித்து மறுபடியும் சிறிது மெல்லியதாக தேவைப்பட்டால் கோதுமையில் தொட்டு, தொட்டு உருட்டிக் கொள்ளவும். அதாவது மீண்டும் ஒரு அப்பளம் அளவிற்கு. இப்போது அவ்வாறு அப்பளம் போல் உருட்டிய சப்பாத்திகளை தோசைக் கல்லில் காய வைத்து அதில் ஒவ்வொன்றாகப் போட்டு சுற்றிலும் அரை ஸ்பூன் நெய் விட்டு திருப்பிப் போட்டு நன்கு வேகும் வரையில் காத்திருந்து எடுக்கவும். (கவனம்: தீயவைத்து விடாதீர்கள். அதே போல முழுவதும் வேகாமலும் எடுத்துவிடாதீர்கள்) இதோ இப்போது சுவையான சப்பாத்தி ரெடி. அதனை உண்டு மகிழுங்கள். வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.

Comments