இட்லி உப்புமா - குறைந்த நிமிடத்தில் எளிதான டிபன் தேவையான பொருள்கள்: இட்லி 6 பெரிய வெங்காயம் 1 காய்ந்த மிளகாய் 2 மீடியம் அளவு மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை உப்பு தேவையான அளவு கருவேப்பில்லை ஒரு கொத்து ஆய்ந்தது கடுகு, அரை உளுத்தம் பருப்பு ஒன்றரை ஸ்பூன் கடலை எண்ணெய் (அ) ரீஃபைன் ஆயில் 4 ஸ்பூன் செய்முறை: இட்லிகளை நன்றாக உதிர்க்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வதக்கவும் அது பொன்னிறம் ஆன மாத்திரத்தில் கருவேப்பிலையை போட்டுக் கிளறி, உடனே தயாராக இருக்கும் அரிந்த பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய் போன்ற இவற்றை போட்டு பொன்னிறமாகும் வரையில் அடுப்பை குறைந்த தணலில் வைத்து தீயவிடாமல் வதக்கவும். பின்னர், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை போட்டுக் கிளறி, உடன் உதிர்த்து வைத்து இருக்கும் இட்லிகளைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும். இதோ இப்போது சுடச் சுட இட்லி உப்புமா தயார். உளுந்து எலும்புகளுக்கு பலம் தர வல்லது அதனை இட்லி உப்புமாவாக செய்து சாப்பிடுவது நல்லது.

Comments
Post a Comment