சளி, இருமலை போக்கும் மிளகு வடை
தேவையான பொருள்கள்: உளுத்தம் பருப்பு ஒரு ஆழாக்கு அரிசி மாவு ஒரு ஸ்பூன் மிளகு 1 ஸ்பூன் சீரகம் அரை ஸ்பூன் உப்பு அரை ஸ்பூன் செய்முறை: உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து கெட்டியாக நறநறவென்று மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். மீண்டும் மிளகு, உப்பு, சீரகம் இவற்றையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை நறநறவென்று அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அரிசி மாவையும் போட்டு உடன் 1 ஸ்பூன் அல்லது உங்களுக்கு தேவையான அளவு நெய் ஊற்றி நன்றாகக் கலந்து கொள்ளவும். ஓரளவு மாவு கெட்டியாகி விடும். இப்போது ஒரு சுத்தமான ஈரத் துணியை விரித்து, அதில் வடையை மெல்லியதாகத் தட்டிக் காய்ந்த எண்ணெய்யில் போட்டு சற்று கரகரப்பானவுடன் எடுக்கவும். இதோ இப்போது சுவையான மிளகு வடை தயார். சீதோஷ்ண நிலையால் எளிதில் பாதிக்கப்படும் நபர்கள் அடிக்கடி மிளகை உணவில் சேர்த்துக் கொண்டால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இருமல், சளி குணமாகும்.

Comments
Post a Comment