இது இட்லிகளின் ராஜா
தேவையான பொருள்கள்: இட்லி மாவு 4 கப் (ரெடி மேட் ஆக கடைகளில் கூட வாங்கிக் கொள்ளலாம்) துவரம் பருப்பு 1 கப் சாம்பார் வெங்காயம் 20 பெரிய தக்காளி 2 புளி ஒரு சிறிய எலுமிச்சை அளவு எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன் கடுகு அரை டீஸ்பூன் உளுந்து 1 டீஸ்பூன் பெருங்காயம் 1 சிட்டிகை அளவு கருவேப்பில்லை, கொத்துமல்லி தேவையான அளவு உப்பு தேவையான அளவு நெய் தேவையான அளவு செய்முறை: துவரம் பருப்பை குழைய வேகவைத்துக் கொள்ளவும். சிறிய வெங்காயம் தோலுரித்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சிறிய வெங்காயம் இல்லாவிட்டால் இரண்டே, இரண்டு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளலாம். அத்துடன் தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இரண்டு டீ ஸ்பூன் தேங்காய்த் துருவல், 2 டீ ஸ்பூன் கடலைப் பருப்பு, 1 டீ ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம், ஆறு காய்ந்த மிளகாய், ஒரு டேபிள் ஸ்பூன் தனியா ஆகிய இவை அனைத்தையும் சிறிது எண்ணெய்யை விட்டு வாசனை வரும் வரையில் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இட்லி மாவைக் கொண்டு குட்டி இட்லியாக ஊற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும். (பொதுவாக இட்லி செய்யும் முறை ஏற்கனவே இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. பார்த்துக் கொள்ளவும்) கடுகு, உளுந்து, தாளித்து நறுக்கிய வெங்காயம் போன்ற இவற்றை வாசனை வரும் வரையில் வதக்கவும். பின்பு தக்காளியும் உப்பும் சேர்த்து தக்காளி கரையும் வரையில் வதக்கி அதில் புளியை 1 தம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். புளி நன்கு கொதிக்கும் சமயத்தில் நீங்கள் அரைத்து வைத்து உள்ள மசாலா, பெருங்காயம், நன்கு குழைந்த பருப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். இறுதியாக கறிவேப்பில்லை, சிறிது மல்லித் தழை சேர்த்து மூடவும். இப்போது பரிமாறும் சமயத்தில் பத்து குட்டி இட்லிகளை வைத்து அதன் மேல் கலக்கிய சாம்பாரை ஊற்றி, அத்துடன் சிறிது நெய்யும் ஊற்றி, பொடிப் பொடியாக நறுக்கிய கொத்து மல்லி தழைகளைத் தூவிப் பரிமாறவும். இதோ இப்போது சுவையான சமைப்பார் இட்லி மனம் கமழும் வாசனையுடன் தயார். -

Comments
Post a Comment