தயிர் இட்லி


தயிர் இட்லி - தயிர் பிரியர்களின் இன்னொரு விருப்பம்
தேவையான பொருள்கள்: இட்லிகள் தேவையான அளவு (குறைந்தது எட்டு அதிகபட்சம் பத்து) பச்சைமிளகாய் 2 தயிர் 1 டம்ளர் தேங்காய் 1 பத்தை சீரகம் 1/2 டீஸ்பூன் இஞ்சி 1/2 துண்டு உப்பு தேவையான அளவு கொத்தமல்லி தேவையான அளவு செய்முறை: கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இறுதியில் இது அலங்கரிக்க தேவைப்படும். அரைக்கத் தேவையானவற்றை (கொத்தமல்லி, தயிர் தவிர) அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது அரைத்த விழுதை தயிரில் போட்டு நன்றாகக் கடைந்து கொள்ளவும். இட்லிகளைச் சிறு, சிறு துண்டுகளாக்கி அரைத்த கலவையில் ஊற விட்டு கொத்தமல்லியைத் தூவி விடவும். காராபூந்தியை இதன்மேல் தூவி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் பின்குறிப்பு : தயிரில் இட்லி வெகுநேரம் ஊறினால் இட்லி குலைந்து விடும் வாய்ப்பு உள்ளது. அதனால் பரிமாறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தயிரை ஊற்றி இட்லியை வேக வைப்பதும் நல்லது.

Comments