பருப்பு வடை


புரோட்டீன்களை அள்ளித் தரும் பருப்பு வடை - அளவோடு சாப்பிட்டால் இருதயத்திற்கு நல்லது
தேவையான பொருள்கள்: கடலை பருப்பு 3/4 கப் துவரம் பருப்பு 1/4 கப் பெரிய வெங்காயம் 1 பச்சை மிளகாய் 2 (காரம் அதிகம் தேவைப்பட்டால் இன்னும் கூட ஒன்று இரண்டு சேர்த்துக் கொள்ளலாம். ஊசி மிளகாயாக இருந்தால் ஒன்றே போதும்) காய்ந்த மிளகாய் 3 கறிவேப்பில்லை தேவையான அளவு பெருங்காயம் 1 சிட்டிகை போதும் உப்பு தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தேவையான அளவு செய்முறை: கடலை பருப்பையும், துவரம் பருப்பையும் நீரில் ஒன்றரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஒன்றரை மணி நேரம் ஆன பிறகு கல் நீக்கி பருப்புகளை நன்கு கழுவவும். அத்துடன் அதில் கால் கப் பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். எஞ்சிய பருப்புகளை நன்கு அரைக்கவும். அத்துடன் காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், உப்பு ஆகிய இவற்றை எல்லாம் சேர்த்து ஓரளவு அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் நீங்கள் ஏற்கனவே வைத்துள்ள பருப்பு மற்றும் வெங்காயத்தை அதே பாத்திரத்தில் போட்டு கிளறி, அதனை சிறு உருண்டைகளாக பிடித்து, தட்டையாக தட்டி, ஒரு பாத்திரத்தில் அல்லது தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். கடைசியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதோ சுடச், சுட சுவையான பருப்பு வடை தயார். பருப்பு அதிகம் எடுத்துக் கொண்டால் உடலில் ப்ரோட்டீன் அதிகம் சேரும். பல வகைகளில் நன்மை தரும்.

Comments