தேங்காய் அல்வா


பிள்ளையாருக்குப் பிடித்த தேங்காய் அல்வா
தேவையான பொருள்கள்: பெரிய தேங்காய் 2 பச்சரிசி அரை ஆழாக்கு நெய் ஒரு கரண்டி முந்திரிப் பருப்பு 12 தூள் வெல்லம் 2 ஆழாக்கு ஏலக்காய் தேவையான அளவு செய்முறை: தேங்காயை பூ போல துருவி வைத்துக் கொள்ளுங்கள் (அதாவது தேங்காயை படல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்). முழு முந்திரிப் பருப்பை தேவைப்பட்டால் உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல ஏலக்காயை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். (முன்னமே மொத்தமாகப் பொடியாக்கி கூட வைத்துக் கொள்ளலாம்) பச்சரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பின்னர் கல் நீக்கி களைந்து விடவும். பிறகு துருவிய தேங்காயையும், அரிசியையும் மிக்சியில் அரைத்து நன்றாக வெண்ணை போல விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் நீங்கள் மிக்சியில் அரைத்த விழுதைப் போட்டு அடுப்பில் வைத்து உடன் வெல்லத் தூளையும், ஏலக்காயையும் போட்டு (எல்லாம் ஒன்று சேரும் படியாக) சுருள வரும் வரையில் பொறுமையாக நன்றாகக் கிளறவும் (அடிப்பிடிக்கவோ, பாத்திரத்தின் பக்கங்களிலோ ஓட்டக் கூடாது). இப்போது நன்கு சுருள வந்தவுடன் நெய்யை விட்டு, முந்திரியையும் வறுத்துப் போட்டு இறக்கி வைக்கவும். இதோ சுவையான தேங்காய் அல்வா தயார். தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

Comments