கொழுப்பையும், இரும்புச் சத்தையும் உடனுக்குடன் தரும் அவல் கேசரி
தேவையான பொருள்கள்: அவல் ஒன்றரை ஆழாக்கு சர்க்கரை இரண்டு ஆழாக்கு முந்திரிப் பருப்பு 8 ஏலக்காய் 3 நெய் ஒன்றரை கரண்டி தண்ணீர் முக்கால் ஆழாக்கு செய்முறை: அவலை முதலில் தூசு போக சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு அவலை அதில் போட்டு நன்கு கிளறவும். பின்னர் அதே பாத்திரத்தில் முக்கால் ஆழாக்குத் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். அவல் நன்கு வெந்தவுடன் சர்க்கரை, ஏலக்காய், குங்குமப் பூ, கேசரிப் பவுடர் ஆகிய இவற்றையும் போட்டு நெய் விட்டுக் கிளறவும். இப்போது நன்றாக வாசனை வந்தவுடன் முந்திரியையும் வறுத்துப் போட்டு மீண்டும் கிண்டி இறக்கி வைக்கவும். இதோ இப்போது சுவையான அவல் கேசரி தயார். சந்தோஷமாக பரிமாறி மகிழவும். அவல் உடலுக்கு தேவையான கார்போ ஹைட்ரேட்டை அதிக அளவில் தரக்கூடியது. இரும்புச் சத்துக்கும் உதவும்.

Comments
Post a Comment