ஜவ்வரிசி உப்புமா


செரிமானப் பிரச்சனைகளை போக்கும் ஜவ்வரிசி உப்புமா
தேவையான பொருள்கள்: ஜவ்வரிசி 100 கிராம் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப் வறுத்த வேர்க்கடலை ஒரு கப் பச்சை மிளகாய் 1 துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன் உப்பு தேவையான அளவு பொட்டுக்கடலை 2 டீஸ்பூன் கொத்தமல்லி சிறிதளவு நெய் ஒரு டீஸ்பூன் எலுமிச்சம்பழம் அரை மூடி செய்முறை: ஜவ்வரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவிடவும். கடாயில் நெய் விட்டு, கடுகு, பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு வெங்காயம், பொட்டுக்கடலை, இஞ்சி, கேரட் துருவல், வேர்க்கடலை எல்லாவற்றையும் சேர்த்து, ஊறிய ஜவ்வரிசியையும் சேர்த்துக் கிளறவும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி ஜவ்வரிசி வெந்ததும் நறுக்கிய கொத்துமல்லி எலுமிச்சம் பழச்சாறு கலந்து நன்றாகக் கிளறி இறக்கவும். இதோ இப்போது சுவையான ஜவ்வரிசி உப்புமா தயார். அரிசியுடன் ஜவ்வரிசியும் சேர்த்துச் சாப்பிட்டால், அது சூடான உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.

Comments