பெண் தெய்வங்களுக்கு உகந்த பொங்கல் அது தான் சர்க்கரைப் பொங்கல்
தேவையான பொருள்கள்: பச்சரிசி அரை ஆழாக்கு வெல்லம் தூள் செய்தது ஒரு ஆழாக்கு பயற்றம் பருப்பு அரை ஆழாக்கு நெய் ஒரு கரண்டி ஏலக்காய் 4 முந்திரிப் பருப்பு 8 உலர்ந்த திராட்சை 8 ஜாதிக்காய் இரண்டு சீவல் சைஸ் செய்முறை: வெல்லத்தை தூள் செய்து வைத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பை உடைத்து வைத்துக் கொள்ளவும். பச்சரிசி, பயற்றம் பருப்பு ஆகிய இந்த இரண்டையும் குக்கரில் வேக வைக்கவும். (அதாவது பச்சரிசி, பயத்தம் பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கல் போகக் களைந்து, இரண்டு ஆழாக்கு நீர் விட்டு ஒரு கனமான பாத்திரத்தில் வைத்துக் குக்கரில் வைக்கவும். பிறகு இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும்) வெல்லப் பாகை தயார் செய்து கொள்ளவும். அதாவது அரை ஆழாக்கு வெல்லத்திற்கு ஒரு குட்டி டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லம் கரைந்தவுடன் மண் இல்லாமல் வடித்துக் கொள்ளவும். பிறகு அடிப்பில் போட்டு பாகு கெட்டியாக வரும் வரையில் காத்திருந்து கிண்டவும். பாகு நன்றாக வந்தவுடன் குக்கரில் வெந்த பச்சரிசி மற்றும் பயற்றம் பருப்பு ஆகிய இந்த இரண்டையும் பாகுடன் அடுப்பில் கலந்து நன்கு அடிப்பிடிக்காமல் மீண்டும் கிண்டவும். ஒரு கரண்டி பாலில் ஒரு சிட்டிகை கேசரிப் பவுடர், குங்குமப்பூ, ஏலக்காய், பச்சை கற்பூரம் ஆகிய இவற்றைப் போடவும். அதையும் நன்றாக அடிப்பிடிக்காமல் பாத்திரத்தில் போட்டுக் கிண்டவும். அத்துடன் ஒரு ஜாதிக்காயில் இருந்து இரண்டு மிளகு அளவு எடுத்து நெய்யில் வறுத்துப் பொடி செய்து அதையும் பாலில் சேர்த்துக் கரைத்து, பொங்கலில் சேர்க்கவும். மீண்டும் அடிப்பிடிக்காமல் கிண்டவும். இப்போது திராட்சை, முந்திரிப் பருப்பு ஆகிய இவற்றையும் நெய்யில் வறுத்துச் சேர்த்து, ஒரு கரண்டி நெய்யையும் விட்டு நன்றாகச் சிறிது நேரம் கிளறிய பின்னர் இறக்கி வைக்கவும். இதோ இப்போது சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார். பின்குறிப்பு : பச்சை கற்பூர வாசனை பிடிக்காதவர்கள் அதனைப் பயன்படுத்த வேண்டாம்) சர்க்கரைப் பொங்கலில் கொஞ்சம் ஜாதிக்காய் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

Comments
Post a Comment