உடலுக்கு குளிர்ச்சி தரும் பூசணி அல்வா
தேவையான பொருள்கள்: வெள்ளைப் பூசனிக்காய் ஒரு பெரிய துண்டு பால் அரை ஆழாக்கு சர்க்கரை ஒரு ஆழாக்கு நெய் ஒரு கரண்டி முந்திரிப் பருப்பு 10 (உடைத்தது) ஏலக்காய் 3 செய்முறை: பூசணிக் காயை கொப்பரைத் துருவலில் சீவிக் கொள்ளவும். பிறகு சீவிய துருவல்களை சிறிது நீர் விட்டுக் கைகளால் நன்கு பிழியவும். பிறகு ஒரு கனமான பாத்திரத்தில் அரை கரண்டி நெய் விட்டு அந்தப் பூசனித் துருவலைப் போட்டு, 5 நிமிடங்கள் வதக்கி அரை ஆழாக்கு பாலையும், கால் டம்பளர் தண்ணீரையும் விட்டுக் கொதிக்கவிடவும். பின்னர் ஏலக்காய்த் தூள், ஒரு சிட்டிகை கேசரிப் பவுடர், குங்குமப்பூ போன்ற இவற்றையும் போட்டு நன்றாகக் கிளறி, பாத்திரத்தின் பக்கங்களில் ஒட்டாமல் (அடிப்பிடிக்காமல்) கிண்டி நன்கு சுருள வந்தவுடன் முந்திரிப் பருப்பையும் வறுத்துப் போட்டு நன்கு கலக்கி இறக்கி வைக்கவும். இதோ இப்போது சுவையான பூசனி அல்வா தயார். பூசணி அல்சர் பிரச்சனையால் பாத்திக்கப்பட்டவர்களுக்கு ஒரு வரப் பிரசாதம். வயிற்று தொந்தரவுகளுக்கும் மிக நல்லது.

Comments
Post a Comment