ஸ்ரீ மகா லட்சுமிக்குப் பிடித்த இனிப்புப் பால் அவல்
தேவையான பொருள்கள்: அவல் 2 ஆழாக்கு சர்க்கரை 1 ஆழாக்கு பால் 3 ஆழாக்கு ஏலக்காய் தூள் தேவையான அளவு செய்முறை: அவலை தூசு போக்கி நன்றாகக் களைந்து கொள்ளவும். பிறகு பாலை நன்றாக கொதிக்க வைத்து, சர்க்கரையை அதில் சேர்த்துக் கிண்டவும். சர்க்கரையுடன் பால் சேர்ந்து கொதி நிலையை அடைந்த மாத்திரத்தில், கொதிக்கும் பாலில் அவலை சேர்க்கவும். பின் நன்கு அடிப்பிடிக்காமல் கிண்டவும். இப்போது கை வசம் இருக்கும் ஏலக்காய் தூளை சேர்த்து நன்றாகக் கரண்டியால் கிளறி அரை மணி நேரம் ஊற வைத்துப் பிறகு சாப்பிடவும். சுவையான பால் அவல் நிச்சயம் உங்கள் உள்ளத்தைக் கவரும். தேவைப்படுபவர்கள், முந்திரி, திராட்சை, கிராம்பு ஆகிய இவற்றையும் நெய்யில் வறுத்துக் கடைசியில் சேர்த்துக் கொள்ளலாம். -

Comments
Post a Comment