தேங்காய் பர்பி - இது நல்ல கொழுப்பை கூட்டும் சுவையான பலகாரம்
தேவையான பொருள்கள்: பெரிய தேங்காய் 1 சர்க்கரை 2 ஆழாக்கு ஏலக்காய் 4 நெய் அரைக் கரண்டி தண்ணீர் தேவையான அளவு செய்முறை: தேங்காயை நன்கு துருவி வைத்துக் கொள்ளவும். அதே போல ஏலக்காயை முன்பே உடைத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கனமான பாத்திரத்தில் ஒரு கரண்டி அளவு தண்ணீரை விட்டு அடுப்பில் வைத்து, தேங்காய்த் துருவலையும் உடன் சர்க்கரையையும் போட்டு நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். நன்றாக சுருண்டு பூ போன்ற பதத்தில் வந்ததும் ஏலக்காய்த் தூள், நெய் இவற்றை எல்லாம் விடவும். அத்துடன் மீண்டும் கிண்டவும். தீய விட்டு விடக் கூடாது கவனம். அதற்கு அடுப்பில் நெருப்பை குறைத்துக் கொள்ளவும். இப்போது வாசனை வந்தவுடன் இறக்கவும். பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் 1 சிட்டிகை கேசரிப் பவுடர் போட்டு மீண்டும் ஒரு தடவைக் கிளறி நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி இலையால் சமமாகத் தட்டி மைசூர் பாக்கு போல வில்லைகளாகப் போடவும். இதோ இப்போது சுவையான தேங்காய் பர்பி தயார். தேங்காயும், சர்க்கரையும் சேரும் போது அதிக கலோரிகள் தரும். அதனால் அடிக்கடி இதனை செய்து சாப்பிட்டால் உடல் எடை கூடுவது மட்டும் இல்லை சர்க்கரை வியாதியையும் கொண்டு வந்து விடும். அளவாக சாப்பிட்டால் நல்லது.

Comments
Post a Comment