அவல் உப்புமா


அவல் உப்புமா நலம் பயக்கும் அவல் உப்புமா. இது அரிசியின் இன்னொரு பரிமாணம் தேவையான பொருள்கள்: அவல் முக்கால் ஆழாக்கு காய்ந்த மிளகாய் 2 தேங்காய்த் துருவல் 3 ஸ்பூன் டேபிள் சால்ட் முக்கால் ஸ்பூன் உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன் கடுகு கால் ஸ்பூன் பெரிய வெங்காயம் 1 முந்திரிப் பருப்பு 4 உடைத்தது செய்முறை: அவலை நன்றாகத் தண்ணீரில் களைந்து, ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு சில மணி நேரம் ஊறவைக்கவும். பின் நீரை ஒட்ட வடித்து விட வேண்டும். பின்னர் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடுகு, மிளகாய் இவற்றைப் போட்டு வறுத்துக் கொண்டு வெங்காயத்தை வதக்கி, பிறகு அவலையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர் துருவிய தேங்காயையும் சேர்க்கவும். இப்போது மேலும் நன்றாகக் கிளறி கீழே இறக்கி வைத்து சுவையை கூட்ட வேண்டும் என்றால் எலுமிச்சம் பழத்தை பிழியவும். அதே போல, ஒருவேளை உருளைக் கிழங்கைச் சேர்க்க வேண்டும் என்றால் அதனைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாயை வறுத்துப் பின்பு உருளைக் கிழங்கையும் போட்டு ஒரு கரண்டி தண்ணீர் விட்டு அது நன்கு வதங்கிய பின்பு வெங்காயத்தை வதக்கி பின்னர் அவல் சேர்க்க இப்போது இன்னும் சுவையான அவல் உப்புமா ரெடி அவலை வேக வைத்து தயிருடன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணிவதுடன் சீதபேதி போன்ற நோய்களுக்கும் நல்லது.

Comments