குலோப்ஜாமுன்


சதையை வளர்க்கும் குலோப்ஜாமுன் 
தேவையான பொருள்கள்: பால் கால் படி சர்க்கரை ஒரு ஆழாக்கு மைதாமாவு ஒரு கரண்டி செய்முறை: பாலை ஒரு பாத்திரத்தில் கொட்டி தீயை குறைத்து வைத்து அடுப்பில் நன்றாக அடிப்பிடிக்காமல் கிளறவும். பால் கெட்டியாக ஆனவுடன் இறக்கி ஆற வைக்கவும். பின்னர் மைதாமாவை சலித்து சேர்த்து நன்றாகக் பிசைந்து சிறு உருண்டைகளாக (பெரிய உருண்டைகள் வேண்டாம் அப்புறம் நன்றாக பாகில் ஊறாது) உருட்டிக் கொள்ளவும். இப்போது சர்க்கரையை 2 கரண்டி நீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். இளம் பாகானவுடன் இறக்கி வைத்து விடவும். மறுபுறம், ஒரு வாணலியில் நெய்யைக் காய வைத்து உருண்டைகளைப் போட்டுச் சிவப்பாக பொரித்துப் பாகில் பதமாக போடவும் (ஏனெனில் போடும் சமயத்தில் உருண்டைகள் பிய்ந்து விடக் கூடாது) நன்றாக ஊறிய பிறகு உபயோகப்படுத்தலாம். இதோ சுவையான குலோப்ஜாமுன் தயார். பின்குறிப்பு : பால் என்பதை விட எருமைப் பாலை பயன்படுத்தினால் குலோப் ஜாமுன் இன்னும் நன்றாக இருக்கும். பாகு கொதிக்க ஆரம்பித்ததும் கையால் தொட்டால் பிசுபிசுப்பு வரும்.குலாப்ஜாமூன்,ரசகுலாவுக்கு ஏற்ற1வது பாகு பதம்.இன்னும் கொதிக்கவிட்டு தொட்டு பார்த்தால் நீளமாக வரும்.லட்டு ஜாங்கிரிக்கு ஏற்ற 2வது பாகு பதம். இன்னும் கொதிக்க விட்டு தொட்டு இழுத்து பார்த்தால் இன்னும் சற்றுஅதிக நீளமாக வரும்.இது மைசூர்பாகு க்கு ஏற்ற 3வது பதம். சர்க்கரைப் பாகு உடல் எடையை கூட்டும்.

Comments