ரவை பாயசம்


உடலுக்கு ஊட்டம் அளிக்கும் ரவை பாயசம்
தேவையான பொருள்கள்: ரவை இரண்டு பிடி சர்க்கரை நான்கு பிடி பால் நான்கு கரண்டி முந்திரிப் பருப்பு 10 ஏலக்காய் 4 கேசரிப் பவுடர் அரை ஸ்பூன் செய்முறை: ஒரு கனமான பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றி ரவையை வறுக்கவும். (கவனம் : ரவையானது அடிப்பிடிக்கவோ, தீயவோ கூடாது. அதனால் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும்) இப்போது வாசனை வந்தவுடன் ஒரு ஆழாக்கு கொதி தண்ணீரை ஊற்றிக் கொண்டே விடாமல் ரவையை கிளறவும். (சூடு இல்லாத தண்ணீரை ஊற்றினால் ரவை கட்டியாகி விடும்) ரவை நன்கு வெந்தவுடன் சர்க்கரையை சேர்த்து மீண்டும் சர்க்கரை நன்கு கரையும் வரையில் கிண்டவும். இப்போது ஒரு கொதி வந்தவுடன் கேசரிப் பவுடர், ஏலக்காய், பால் ஆகிய இவற்றை எல்லாம் சேர்த்து உடன் முந்திரிப் பருப்பையும் நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். மீண்டும் நன்கு அடிப்பிடிக்காமல் கிண்டி கொதித்துப் பொங்கும் நிலையில் வரும் போது அடுப்பை அணைத்துப் பாத்திரத்தை இறக்கவும். இதோ இப்போது சுவையான ரவை பாயசம் தயார். -

Comments