ரவா கேசரி


அனைத்துப் பண்டிகைகளுக்கும் ஏற்ற ரவா கேசரி
தேவையான பொருள்கள்: ரவை அரை ஆழாக்கு சர்க்கரை ஒரு ஆழாக்கு நெய் ஒன்றரைக் கரண்டி முந்திரிப் பருப்பு 8 உடைத்தது ஏலக்காய் 2 கேசரிப் பவுடர் தேவையான அளவு தண்ணீர் ஒரு ஆழாக்கு செய்முறை: முந்திரிப் பருப்பை இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். இல்லை முன்னமே ஏலக் காய்களை தோல் நீக்கி பொடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு ஆழாக்கு தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து தயாராக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு கரண்டி நெய்யைக் காய வைத்து ரவையைக் கொட்டி தீய விடாமல் வாசனை வரும் வரையில் நன்கு வறுக்கவும். பின்னர் இறக்கி வைக்கவும். இப்போது முன்பு நீங்கள் கொதிக்க வைத்த அந்த சூடான தண்ணீரை இந்த ரவையில் அதனைக் கிளறிய படியே கொட்டவும். பின்பு அதனை மறுபடியும் அடுப்பில் வைத்து சர்க்கரையையும் சேர்த்து அடி பிடிக்காமல் கிளற வேண்டும். பாத்திரத்தின் பக்கங்களில் ஒட்டாதபடி ரவை வெந்த மாத்திரத்தில் கேசரிப் பவுடர், ஏலக்காய் தூள் (குங்குமப் பூ இருந்தால் அதனையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்) இவற்றை கரைத்து ரவையோடு சேர்க்கவும். பின்பு நன்றாக கலக்கவும். இப்போது முந்திரிப் பருப்பையும் இதனுடன் நெய்யில் வறுத்து சேர்க்கவும். உடன் திராட்சையையும் வறுத்துப் போடலாம். மீண்டும் கிளறி இறக்கவும். இதோ சுவையான ரவா கேசரி தயார். -

Comments