கண்களை காக்கும் காரட் பாயசம்
தேவையான பொருள்கள்: காரட் (பெரியதாக) 2 சர்க்கரை அரை ஆழாக்கு பால் அரை லிட்டர் ஏலக்காய் 4 முந்திரிப் பருப்பு 8 செய்முறை: காரட்டை மண் இல்லாமல் கழுவி மிகச் சிறியதாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும். (குக்கரிலும் கூட வேக வைத்துக் கொள்ளலாம்) பிறகு வேக வைத்த எஞ்சிய நீரை நன்கு வடிகட்டிக் கொள்ளவும். நீர் இல்லாமல் வடிகட்டிய பின், காரட்டை மட்டும் மிக்சியில் வைத்து விழுது போல அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கனமான பாத்திரத்தில் நீங்கள் அரைத்த காரட் விழுதைப் போட்டு, ஒரு முறை நன்கு கிளறி உடன் சர்க்கரையையும் சேர்த்துக் கிளறவும். இப்போது மேலும் ஒரு கரண்டி நீர் விட்டுக் கிண்டி உடன் பாலையும் அந்த விழுதுடன் சேர்த்து நன்றாக கொதித்தபின் கீழே இறக்கி வைத்து நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய் ஆகிய இவற்றையும் சேர்க்கவும். இதோ இப்போது சுவையான காரட் பாயசம் சுடச் சுட தயார். பரிமாறி மகிழவும். வைட்டமின் “ஏ” சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

Comments
Post a Comment