ஜீரண சக்தியை தூண்டும் பைனாப்பிள் கேசரி
தேவையான பொருள்கள்: ரவை 1 கப் சர்க்கரை ஒன்றே கால் கப் நெய் கால் கப் பைனாப்பிள் கால் பாகம் கேசரி பவுடர் கால் ஸ்பூன் எண்ணெய் அரை ஸ்பூன் பைனாப்பிள் எசென்ஸ் ஒரு ஸ்பூன் செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் மற்றும் நெய் விட்டு அதில் ரவையை நன்கு வறுக்கவும் (கவனம் : ரவையானது அடிப்பிடிக்கவோ, தீயவோ கூடாது. அதனால் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும்) மறுபுறம் ஒரு பாத்திரத்தில் இரண்டரை தம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விட்டு அந்த கொதிக்கும் நீரில் கேசரி கலர் சேர்த்து அதனை நீங்கள் வறுத்து வைத்துள்ள ரவையுடன் சேர்த்து அடுப்பில் நன்கு கிளறவும். ரவை வேகும் வரையில் கிளற வேண்டும். ரவை நன்கு வெந்த மாத்திரத்தில் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை நன்கு கட்டியில்லாமல் கரையும் வரையில் மீண்டும் கிண்டிக் கிளறவும். இந்த இடைப்பட்ட நேரத்தில் பைனாப்பிளைத் தோல் நீக்கி மிகவும் பொடியாக நறுக்கவும். பின்னர் நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள், பைனாப்பிள் எசன்ஸ், அத்துடன் மீதம் இருக்கும் நெய் ஆகிய இவற்றை எல்லாம் சேர்த்து நன்கு கிண்டி பாத்திரத்தை இறக்கவும். இதோ இப்போது சுவையான பைனாப்பிள் கேசரி தயார். இது ஒருவருக்குப் போதுமானது. மூட்டு வலியைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது பைனாப்பிள். கால்சியம், பொட்டாசியம், நார்சத்து நிறைந்தது. சிறு வயதினரின் எலும்பு வளர்ச்சிக்கும், பெரியோர்களின் வளர்ச்சியடைந்த எலும்புகள் மேலும் வலுப்பெறவும் பைனாப்பிள் உதவும்.

Comments
Post a Comment