வாழைப்பழ அல்வா


எடை கூட உதவும் அல்வா. அது தான் வாழைப்பழ அல்வா
தேவையான பொருள்கள்: ரவை ஒரு கப் வாழைப் பழத் துண்டு ஒரு கப் பால் ஒரு கப் சர்க்கரை ஒரு கப் நெய் அரைக் கரண்டி தண்ணீர் அரை கப் செய்முறை: ரவையை நெய் விட்டுத் தீய விடாமல் நன்கு வறுத்துக் கொள்ளவும். வாசனை வந்தவுடன் அரை கப் தண்ணீர், 1 கப் பால் இவற்றைக் கலந்து ஊற்றி உடன் நறுக்கிய வாழைப் பழத் துண்டுகளையும் போடவும். அடிப்பிடிக்காமல் இருக்க நன்கு கிண்டவும் பிறகு சற்று நேரத்தில் வெந்ததும் சர்க்கரையைப் போட்டு சிறிது நெய் விட்டுக் கிளறவும். நன்கு சுருள ஒட்டாமல் வந்த பதத்தில் இறக்கி வைக்கவும். இதோ சுவையான வாழைப்பழ அல்வா தயார். பின்குறிப்பு : பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் கேசரிப் பவுடரை போடலாம். உடல் எடை குறைவாக உள்ளவர்கள் அடிக்கடி வாழைப்பழத்தில் அல்வா செய்து சாப்பிட உடல் எடை கூடும்.

Comments