மைசூர் பாகு


மைசூர் பாகு கொழுப்பை அதிகரிக்க உதவும்
தேவையான பொருள்கள்: கடலை மாவு அரை ஆழாக்கு சர்க்கரை ஒன்றரை ஆழாக்கு நெய் ஒரு ஆழாக்கு செய்முறை: ஒரு கெட்டியான பாத்திரத்தில் தண்ணீர் விட்டுச் சர்க்கரைப் பாகு வைத்துக் கொள்ள வேண்டும். (ஒரு தட்டில் ஒரு சொட்டு விட்டால் முத்து போல வர வேண்டும். அது தான் பதம். அந்தப் பதத்திற்கு வரும் வரையில் நன்கு காய்ச்சி ஒன்று இரண்டு நிமிடங்கள் கூட சூடு தனிய காத்திருக்கவும்) இடைப்பட்ட நேரத்தில் மீண்டும் அடுப்பை மூட்டி, மிதமான சூட்டில் இன்னொரு பாத்திரத்தில் நெய்யை நன்கு காய வைத்துக் கொள்ளவும். இந்த சமயத்தில் ஏற்கனவே கெட்டிப் பாகு நாம் சொன்ன பதத்திற்கு வந்து விடும். இப்போது ஒரு முறை கொஞ்சம் கடலை மாவு, கொஞ்சம் நெய் என்ற இந்த விதத்தில் மாற்றி மாற்றி பாகில் நன்கு (நெய்யும், கடலை மாவும் நன்கு பரவி சேர வேண்டும்) கிளறிக் கொண்டே சேர்க்கவும். ஒரு கட்டத்தில் பூத்து வரும். இவ்வாறு பூத்து வந்த மாத்திரத்தில் நெய் தடவிய தட்டில் தயாரான மைசூர் பாகை மெல்ல கொட்டி வில்லைகளாக போடவும். இதோ நெய் மணக்கும் மைசூர் பாகு தயார். இரவு தூங்கப் போவதற்கு முன்னாள் மைசூர் பாகு போன்ற ஏதேனும் ஒரு இனிப்பு பலகாரத்தை அளவாக சாப்பிட்டு விட்டு தூங்கப் போனால் நன்றாக தூக்கம் வரும்.

Comments