ரவைப் பொங்கல்


ரவைப் பொங்கல் - குறைந்த கலோரியில் நிறைந்த சக்தி பெற ஒரு மாற்று வழி
தேவையான பொருள்கள்: ரவை 1 ஆழாக்கு கடுகு அரை ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு பயற்றம் பருப்பு கால் ஆழாக்கு இஞ்சி 1 சிறிய துண்டு முந்திரிப் பருப்பு 6 உடைத்தது மிளகு அரை ஸ்பூன் சீரகம் அரை ஸ்பூன் உப்பு தேவையான அளவு பச்சை மிளகாய் 1 காய்ந்த மிளகாய் 1 நெய் ஒன்றரைக் கரண்டி செய்முறை: ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கிள்ளிய பச்சை மிளகாய் உடன் கிள்ளிய காய்ந்த மிளகாய், கருவேப்பில்லை ஆகியவற்றை போட்டு வெடித்தவுடன் பயற்றம் பருப்பு போட்டு சிவக்க வறுத்து (அதாவது அதிகம் சிவந்து விடாமல் வறுத்துக் கொள்ள வேண்டும்) பின்னர் இஞ்சி, முந்திரிப் பருப்பு, மிளகு, சீரகம் என எல்லாவற்றையும் வறுத்து (ஞாபகம் இருக்கட்டும், வறுக்கும் சமயத்தில் அடுப்பில் பிளேம் குறைவாக இருப்பது அவசியம்) இரண்டரை ஆழாக்கு நீர் ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும் நன்றாக கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து வறுத்த ரவையை ஒரு கையால் சிறிது, சிறிதாக போட்டுக் கொண்டே மறுகையால் விடாது கிண்டிக் கொண்டே இருக்கவும். (அதாவது ரவை இறுகும் வரையில் கிண்ட வேண்டும்) பின்னர் நெய் சேர்த்து கரண்டிக் காம்பால் கிளறி ஒரு நிமிடம் கழித்து இறக்கி வைத்துப் பரிமாறவும். இதோ இப்போது சூடான ரவைப் பொங்கல் தயார். இதனை காரச் சட்டினியுடன் பரிமாற சூப்பரோ சூப்பர். -

Comments