உடல் எடையைக் கூட்ட உதவும் பாதாம் அல்வா
தேவையான பொருள்கள்: பாதாம் பருப்பு 100 கிராம் சர்க்கரை ஒரு ஆழாக்கு நெய் ஒரு கரண்டி தண்ணீர் தேவையான அளவு செய்முறை: பாதாம் பருப்பை கொதிக்கும் நீரில் இரண்டு மணி நேரம் நன்கு ஊற வைக்கவும். பின்னர் பாதாம் பருப்பின் தோலை உரிக்கவும் சிறிது தளர அதிகம் தண்ணீர் விடாமல் விழுது போல அரைத்துக் கொள்ளவும் இப்போது கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்த விழுதை போட்டு சர்க்கரையையும் சேர்த்து அரைக் கரண்டி நெய் விட்டுக் கேசரி பவுடர் ஒரு சிட்டிகை அத்துடன் குங்குமப் பூ இருந்தால் அதையும் போட்டு விடாமல் கிளறவும். பக்கங்களில் ஒட்டாத படி நன்றாகக் கிளறியவுடன் சற்று தளர்த்தியாக இருக்கும் நிலையில் மீதி நெய்யையும் விட்டு நன்கு கிண்டி கீழே இறக்கி வைக்கவும். இதோ இப்போது சுவையான பாதாம் அல்வா தயார். பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே அடிக்கடி சாப்பிட்டு வர நினைவாற்றல் அதிகரிக்கும்.

Comments
Post a Comment