கேழ்வரகு அடை ஊட்டச்சத்து நிறைந்த கேழ்வரகு அடை.
தேவையான பொருள்கள்: கேழ்வரகு மாவு 1 ஆழாக்கு வெல்லம் 2 எலுமிச்சை அளவு துருவிய தேங்காய் 1 கப் தோல் நீக்கிய ஏலக்காய் 2 செய்முறை: வெல்லத்தை ஒரு கரண்டி தண்ணீரில் அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அடிப் பிடிக்காமல் கரைய விடவும். வெல்லம் கரைந்தவுடன் இறக்கி வைத்து மண் வராத மாதிரி வடி கட்டவும். வடிகட்டின வெல்ல நீரில் தேங்காய்த் துருவல், ஏலக்காய், கேழ்வரகு மாவு இவற்றைப் போட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கிளறவும். சுமார் ஐந்து நிமிடங்கள் கிளறி மாவு பாதி வெந்தவுடன் கீழே இறக்கி வைக்கவும். தேவைப்பட்டால் அல்லது மிகவும் உதிரியாக இருந்தால் சிறிது தண்ணீர் விட்டுப் பிசைந்து கொண்டு ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி ஒரு இலையின் மேல் எண்ணெய் தடவி வைத்து மெல்லியதாகச் சிறிது பெரியதாக பக்குவமாக தட்டி தோசைக் கல்லில் போட்டு ஒரு ஸ்பூன் நெய் ஊற்றித் திருப்பிப் போட்டு வெந்தவுடன் எடுக்கவும். (இலைக்கு பதில் சுத்தமான பாலித்தீன் கவரில் கூட சிறிது எண்ணெய் தடவி அடை தட்டலாம்) இதோ இப்போது சுவையான கேழ்வரகு அடை தயார். இதனை அடிப்படையாகக் கொண்டு கோதுமை மாவையும் கூட பயன்படுத்தி நாம் அடை செய்யலாம். கேழ்வரகு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். சர்க்கரை வியாதியை கூட கட்டுப்படுத்தலாம்.

Comments
Post a Comment