வெண் பொங்கல்


மனம் கமழும் வெண்பொங்கல் - அனைத்து தெய்வங்களுக்கும் ஏற்றது
தேவையான பொருள்கள்: பச்சரிசி 1 ஆழாக்கு பயற்றம் பருப்பு அரை ஆழாக்கு மிளகு அரை ஸ்பூன் சீரகம் அரை ஸ்பூன் இஞ்சி 1 சிறிய துண்டு முந்திரிப் பருப்பு 4 உடைத்தது நெய் 1 கரண்டி உப்பு தேவையான அளவு செய்முறை: அரிசி, பருப்பு இரண்டையும் களைந்து கொண்டு ஒரு குக்கரில் இரண்டே கால் ஆழாக்கு தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் தேவையான அளவு உப்பு போடவும். மிளகு, சீரகம் இவற்றை ஒன்றும், இரண்டுமாக தட்டி, சிறிது நெய்யில் பொரித்துச் சேர்க்கவும். இஞ்சியை தோல் நீக்கிப் பொடிப் பொடியாக நறுக்கி நெய்யில் அது பொன்னிறம் வரும் வரையில் வறுத்து, உடன் முந்திரிப் பருப்பையும் வறுத்துச் சேர்த்து ஒரு கரண்டி நெய் ஊற்றி நன்றாகக் கிளறி 5 நிமிடங்கள் கழித்து இறக்கி வைக்கவும். பின்குறிப்பு : அரிசியையும், பருப்பையும் குக்கரில் தனியாக வேக வைத்து மற்றுமொரு பாத்திரத்தில் போட்டு மேற்சொன்னவாறு செய்யலாம். (குக்கர் வைக்கும் முறையை ஏற்கனவே இதில் நான் சொல்லி உள்ளேன்) பொங்கலில் அதிகம் மிளகு சேர்த்து சாப்பிடும் போது பசியின்மை, அஜீரணம் போன்ற எண்ணற்ற பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறது.

Comments