வடை


எலும்பிற்கு வலு சேர்க்கும் வடை
தேவையான பொருள்கள்: உளுத்தம் பருப்பு அரை ஆழாக்கு உப்பு தேவையான அளவு இஞ்சி 1 துண்டு பச்சை மிளகாய் 2 காரம் வேண்டுபவர்கள் ஒன்று இரண்டு கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் ஊசி மிளகாயாக இருந்தால் இரண்டே போதும் செய்முறை: உளுத்தம் பருப்பை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிக்சியில் போட்டு உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி ஆகிய இவற்றை சேர்த்து அதிகம் தண்ணீர் விடாமல், கெட்டியாகச் சிறிது நறநறவென்று அரைத்த ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு சுத்தமான இலையில் தேவையான அளவு சிறிய உருண்டைகளாக உருட்டி, வடையைத் தட்டி, காய்ந்த எண்ணெய்யில் போட்டுப் பொன்னிறமானவுடன் எடுக்கவும். இலை கைவசம் இல்லாதவர்கள் சுத்தமான பிளாஸ்டிக் தாளிலும் வடைகளைத் தட்டலாம். -

Comments