ரவா தோசை - அரிசி பதார்த்தத்திற்கு ஒரு மாற்று வழி
தேவையான பொருள்கள்: ரவை 1 ஆழாக்கு அரிசி மாவு அரை ஆழாக்கு சீரகம் அரை ஸ்பூன் உப்பு போதுமான அளவு கெட்டி மோர் 1 கரண்டி (புளிப்பு பிரியர்கள் புளிப்பு மோரைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்) பச்சை மிளகாய் 1 (காரம் வேண்டுபவர்கள் ஒன்று, இரண்டு கூட சேர்த்துக் கொள்ளலாம்) செய்முறை: ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு, உப்பு, சீரகம், பொடிப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பில்லை போன்றவற்றை போட்டு சலித்த அரிசி மாவையும் போட்டு இரண்டு கரண்டி தண்ணீர் விட்டுத் தேவை ஆனால் வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கிப் போட்டுக் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படிக் கரைத்த மாவைச் சிறிது நேரம் ஊற வைத்துப் பின் தோசை வார்க்க வேண்டும். ரவா தோசை வார்க்கும் சமயத்தில், நடுவில் மாவு ஊற்றிக் கரண்டியால் பெரிதாக்காமல் தோசைக் கல்லின் ஓரங்களில் முதலில் மாவு ஊற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக உள்பக்கம் வட்டமாக ஊற்றி ஓரங்களில் எண்ணெய் விட்டு வார்க்கவும். கரண்டியால் சரிப்படுத்தக் கூடாது. -

Comments
Post a Comment