கேழ்வரகு தோசை - சர்க்கரை நோயாளிகளுக்கான அற்புத உணவு தேவையான பொருள்கள்: கேழ்வரகு 1 ஆழாக்கு அரிசி மாவு 2 பிடி மோர் 1 கரண்டி உப்பு தேவையான அளவு பெருங்காயம் 1 சிட்டிகை அளவு பச்சை மிளகாய் 2 மீடியம் சைஸ் செய்முறை: கேழ்வரகு மாவு, அரிசி மாவு, மோர், உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் என மேற்கண்ட அனைத்தையும், மேற்கண்ட அளவுகளின் படியே ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்துக் கரைத்து மெல்லிய தோசைகளாய் வார்த்து எடுக்கவும். கேழ்வரகு மாவு தயாரிக்கும் விதம்: கேழ்வரகு மாவை ரெடி made ஆகக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் அல்லது நீங்களே தயாரிக்க விரும்பினால் கேழ் வரகை வெயிலில் காய வைத்து, தோல் போகப் புடைத்து மிஷினில் கொடுத்து அரைத்துச் சலித்து வைத்துக் கொள்ளவும். கேழ்வரகு சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

Comments
Post a Comment