சேமியா பாயசம்


அனைத்து விழாக்களுக்கும் ஏற்ற சுவையான சேமியா பாயசம்
தேவையான பொருள்கள்: நன்கு உதிர்ந்த சேமியா ஒரு கரண்டி சர்க்கரை 2 கரண்டி பால் 2 கரண்டி ஏலக்காய் 4 முந்திரிப் பருப்பு 4 குங்குமப் பூ 2 சிட்டிகை கேசரிப் பவுடர் 1 சிட்டிகை திராட்சை 8 செய்முறை: சேமியாவை ஒரு கனமான பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய்யில் வருத்துச் சிறிது சிவப்பானவுடன் அரை ஆழாக்குத் தண்ணீரை கொட்டி, நன்கு விடாமல் கிளறவும். சேமியா இப்போது நன்கு வெந்தவுடன் சர்க்கரையை சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை கிண்டி அது கரைந்த மாத்திரத்தில் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். பின்னர் இரண்டு கரண்டி காய்ச்சின பாலில் குங்குமப்பூ, கேசரிப் பவுடர், பொடி செய்த ஏலக்காய் ஆகிய இவற்றைப் போட்டு நன்கு கலக்கி சேமியாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் மீண்டும் நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, திராட்சை ஆகிய இவற்றையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்கு கலக்கவும். இதோ சுவையான சேமியா பாயசம் தயார். பின்குறிப்பு : அரை ஆழாக்கு நெய்யில் வறுத்த சேமியாவிற்கு ஒரு ஆழாக்கு தண்ணீர் சேர்த்து குக்கரிலும் வேக வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கி மேற்கண்ட பொருள்களை சேர்த்துப் பாயசம் செய்யலாம். இந்த முறையில் செய்தால் எரி பொருள் மிச்சம் ஆகும். அடிப் பிடிக்கும் பிரச்சனையும் வராது. கிண்டி, கிண்டி கைகளும் வலிக்காது) -

Comments