புரதசத்தை அதிகரிக்க உதவும் வேர்க்கடலை உருண்டை
தேவையான பொருள்கள்: வறுத்த வேர்க்கடலை பருப்பு 2 ஆழாக்கு தூளான வெல்லம் ஒரு ஆழாக்கு தண்ணீர் தேவையான அளவு செய்முறை: வேர்க்கடலையை தோல் போக நன்றாகத் தேய்த்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை ஒரு கப் நீரில் விட்டு கெட்டிப் பாகு வைத்துக் கொண்டு, இறக்கி வைத்து வேர்க்கடலையை அதில் கொட்டி ஒரு முறை நன்கு கிளறிச் சூடாக இருக்கும் சமயத்திலேயே உருண்டைகளாகப் பிடிக்கவும். பிறகு பிடித்த வேர்க்கடலை உருண்டைகளை சிறிது நேரத்தில் பரிமாறவும். பின்குறிப்பு : இதே வகையில் பொரி உருண்டையையும் பிடிக்கலாம். உருண்டை நன்றாக வருவது என்பது நீங்கள் வைக்கும் வெல்லப் பாகின் பதத்தில் தான் உள்ளது. அதாவது வெல்லப் பாகு உருட்டும் அளவிற்கு கெட்டியாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் ஒரு ஸ்பூன் நீங்கள் காய்ச்சிய பாகை விட்டுக் கையால் உருட்டினால் நன்கு உருட்ட வர வேண்டும். அந்த பதத்தில் பாகு இருக்க வேண்டும். வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்றபடியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும். ஏனெனில் இதிலுள்ள சர்க்கரையின் அளவு இரத்தத்தில் மிக மிக குறைந்த அளவே சேருவதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.

Comments
Post a Comment