பயற்றம் பருப்புப் பாயசம்


உடலுக்கு குளிர்ச்சி தரும் பயற்றம் பருப்பு பாயசம்
தேவையான பொருள்கள்: பயற்றம் பருப்பு கால் ஆழாக்கு பால் அரை ஆழாக்கு ஏலத்தூள் அரை ஸ்பூன் வெல்லம் 3 எலுமிச்சை அளவு செய்முறை: பயற்றம் பருப்பை கல் நீக்கி நன்கு கழுவ வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் பயற்றம் பருப்பை தண்ணீர் விட்டு நன்கு குழைய வேக வைக்க வேண்டும். (அதாவது கால் ஆழாக்கு பயற்றம் பருப்புக்கு முக்கால் ஆழாக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்) பயற்றம் பருப்பு நன்கு வெந்தவுடன் அதில் வெல்லத்தைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். (வெல்லத்தை ஊற வைத்து ஒவ்வொருமுறையும் முன் சொன்ன மாதிரி வடிகட்ட மறக்காதீர்கள்) இப்போது பயற்றம் பருப்பு, வெல்லத்துடன் சேர்ந்து நன்கு கொதித்த மாத்திரத்தில் ஏலத்தூளையும் சேர்த்து இறக்கி வைத்து, சிறிது ஆறிய பின்னர் பாலையும் சேர்த்துக் கலக்க வேண்டும். இதோ இப்போது சுவையான பயற்றம் பருப்பு பாயசம் தயார். பயற்றம் பருப்பில் புரதசத்து மிகுந்துள்ளது. இவை ஊன் உணவிற்கு இணையானவை. எனவே, அவற்றை உண்பது உடலுக்கு அதிக புரதம் கிடைத்திடச் செய்யும்.

Comments