அப்பம் - இது காலை பொழுதுக்கு ஏற்றது
தேவையான பொருள்கள்: மைதா மாவு ஒரு ஆழாக்கு ஏலக்காய் 5 அரிசி மாவு 1 சிறிய கப் வெல்லத் தூள் அரை ஆழாக்கு தண்ணீர் தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் தேவையான அளவு செய்முறை: வெல்லத்தை நன்கு பொடித்து ஒரு கரண்டி தண்ணீர் விட்டு பத்து நிமிடங்கள் நன்கு ஊற வைக்கவும் பிறகு கைகளால் நன்கு கரைத்து மண் இல்லாதபடி நன்கு வடிகட்டிக் கொள்ளவும். அத்துடன் மைதா மாவு, அரிசி மாவு, ஏலக்காய் இவற்றை எல்லாம் சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். இப்போது வாணலியில் எண்ணெய் விட்டு அது நன்கு காய்ந்த மாத்திரத்தில் அடுப்பை சிறு தீயாக வைத்துக் கொண்டு ஒவ்வொரு கரண்டியாக அப்பம் வார்த்து, தீயாமல் திருப்பிப் போட்டு சிவக்க எடுக்கவும். இதோ இப்போது சுவையான அப்பம் தயார். பின்குறிப்பு : சுவை பிரியர்கள் விரும்பினால், மேற்சொன்னவற்றுடன் நன்கு பழுத்த இரண்டு வாழைப் பழத்தை மசித்துக் கரைசலோடு சேர்த்தும் அப்பம் செய்யலாம். அதே போல அரிசி மாவை வெல்லத்தில் கரையவைத்தும் அப்பம் செய்யலாம். -

Comments
Post a Comment