சந்திர தோஷத்தை நீக்கும் அரிசிப் பாயசம்
தேவையான பொருள்கள்: அரிசி அரை ஆழாக்கு பால் அரை லிட்டர் சர்க்கரை முக்கால் ஆழாக்கு முந்திரிப் பருப்பு (உடைத்தது) 8 குங்குமப்பூ (நீங்கள் விரும்பினால்) தேவையான அளவு ஏலக்காய் 4 (பொடி செய்தது) செய்முறை: ஒரு கனமான பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றி அரிசியை நன்கு வறுத்துக் கொள்ளவும். உடன் ஒரு ஆழாக்கு தண்ணீர் ஊற்றிய படியே விடாமல் மேலும் கிளறவும். அரிசி வேக சற்று நேரம் ஆகும். ஆனால் வேகும் வரையில் கிண்டவும். இப்போது வெந்தவுடன் சர்க்கரையை சேர்க்கவும். அத்துடன் மீண்டும் நன்றாகக் கிளறவும். வெந்த அரிசியும், சர்க்கரையும் நன்கு கலந்த மாத்திரத்தில் கேசரிப் பவுடர், ஏலக்காய் கலந்த பாலையும் சேர்த்து உடன் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து அதையும் சேர்த்துப் போடவும். பிறகு மேற்கண்ட எல்லாவற்றையும் போட்ட மாத்திரத்தில் மீண்டும் சில மணித் துளிகள் (எல்லாம் ஒன்று சேரும் வரையில்) நன்கு கிளறி இப்போது அடுப்பை அனைத்துப் பாத்திரத்தை இறக்கி வைக்கவும். இதோ இப்போது சுவையான அரிசிப் பாயசம் தயார். பின்குறிப்பு : நெய்யில் வறுத்த அரிசியில் ஒரு ஆழாக்கு நீர் விட்டு குக்கரிலும் வேக வைத்து எடுத்து மேற்கண்ட் பொருள்களை சேர்த்துப் பாயசம் செய்யலாம். குக்கரில் வைப்பதால் அடிப்பிடிக்கும் பிரச்சனை வராது) -

Comments
Post a Comment